சங்கராபுரம் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் வடபொன்பரப்பி கிராமத்தில் 34 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டுமான பணிகள், 29 லட்சம் ரூபாயில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமான பணி, கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுமான பணி, பிரம்மகுண்டம் கிராமத்தில் 30 லட்சம் ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி, 40 லட்சம் ரூபாயில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமான பணி மற்றும் அருளம்பாடி கிராமத்தில் 23 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகிய பணிகளை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வில் பணிகளை தரமாக மேற்கொண்டு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார். அப்போது பி.டி.ஓ. அய்யப்பன், உதவி பொறியாளர்கள் அரிகிருஷ்ணன், ராஜகோபால், பணி மேற்பார்வையாளர்கள் நேரு, சாமுவேல் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.