தமிழக அரசின் இலக்கிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் 21 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் இலக்கிய திறனறி தேர்வு கடந்த ஆக., மாதம் நடந்தது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் 1,500 மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். இத்தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியானது.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் 37 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதில், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக, மாணவர் சிவபாலன் 100க்கு 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஏ.கே.டி.கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் மற்றும் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் உள்ளிட்ட பிரிவு முதல்வர்கள், ஆசிரியர்கள் பலர் பாராட்டினர். தொடர்ந்து, தேர்வான மாணவ, மாணவிகள் கலெக்டர் பிரசாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.