
ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அரசு நிர்ணயித்த ரூபாய் 2,000 வழங்க வலியுறுத்தியும், கடலூர் மாவட்டத்தை இயற்கையின் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பாக கோடங்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா பேரின்பம் தலைமையிலும், நாவலூரில் முருகானந்தம், மாநில துணை செயலாளர் தலைமையிலும், சிறுமுளையில் பஞ்சமி நில மீட்பு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தலைமையிலும், பெருமுளையில் ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமையிலும் மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.