வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வுதிருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், சே. கூடலூர், அகரம் ஆகிய கிராமங்களில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தேவைகள் குறித்து விசாரணை செய்து உடனடியாக பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, நியாய விலை கடை, கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அவற்றை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என கலபெக்டர் கூறினார்.பின்னர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, சத்துமாவு உருண்டை ஆகியவற்றை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர் அரவிந்த், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், பிடிஓக்கள் ரவீந்திரநாதன், பரிமேலழகன், தாசில்தார் மோகனராமன், பொறியாளர்கள் மாதவி, ராஜலட்சுமி, துணை பிடிஓ கவிதா, பணி மேற்பார்வையாளர் கேப்பு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயேஸ்வரி அலமேலு, கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தோஷ், ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.