திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை பதவி நீக்கம் செய் ஆர்ப்பாட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் ஆற்றல் மிகு போராளி ச. நியூட்டன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்றத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக செய்ய தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க செங்கம் -தண்டராம்பட்டு மகளிர் மாவட்ட செயலாளர் சுகந்திமருதுபாண்டி, ஒன்றிய செயலாளர் சஞ்சய், நகரச் செயலாளர் ஆட்டோ ஆறுமுகம், சரவணன், பொருளாளர் சம்பத், ஒன்றிய நிர்வாகிகள் ஆலடியான், சுபாஷ், நகர நிர்வாகி சத்யராஜ், அன்பு, மற்றும் ரகு, மோகன், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்று அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக மாவட்டச் செயலாளர் ச. நியூட்டன் அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.