திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசு முதலாளிகளின் பக்கம் இருக்கிறது. விளைநிலங்களை அழித்து அறிவுசார் மையங்கள் அமைக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்துகொண்ட ஒரே கட்சி பாமக தான். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.திருப்போரூரில தான் விமான நிலையம் அமைக்க வேண்டும்.
கொடுங்கோல் ஆட்சியில் கூட உழவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்ததில்லை. ஆனால், திமுக அரசு அதனை செய்கிறது. எங்களால் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் நடந்துள்ளது என திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அடுத்து பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், “உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் தான் கடவுள்.
நான் என்னை அடிப்படையில் உழவர் என்றே தற்போதும் அறிமுகப்படுத்திக்கொள்வேன்” என கூறி, தமிழகத்தில் விவசாயிகள் சந்திக்கும் முக்கிய 10 பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.