திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கணித தினவிழாவில் தமிழ்நாடு மாநில பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் டி. முருகவேல் பங்கேற்று ‘அன்றாட வாழ்வில் கணிதம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி மாணவிகள் இடையே தேசிய கணித தினத்தையொட்டி புதிர் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர்கள் கோவிந்தராஜ், செந்தில் குமார், சாந்தி, பிஆரட்சி செந்தில் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.