
இனி பயங்கரவாத ஊடுருவல்கள்களுக்கு வாய்ப்பே இல்லை – பாகிஸ்தான் எல்லையில் இந்தியா மின்னணு கண்காணிப்பு அமைப்பை நிறுவுகிறது.
4 ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லை முழுவதும் மேம்பட்ட மின்னணு கண்காணிப்புடன் மூடப்படும். இது ஊடுருவல்களைக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க எல்லை பாதுகாப்பு படைக்கு உதவும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
கதுவாவில் உள்ள BSF புறக்காவல் நிலையத்திற்கு பயணம் செய்தபோது அமித்ஷா புதிய வசதிகளைத் திறந்து வைத்தார் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.