






குலசேகரம், ஜூன் 20-
குலசேகரத்தில் காதலி – வீட்டில் தூக்கிட்டு தற் கொலைசெய்துக்கொண்ட திருச்சி ஐ.டி., ஊழியர் உடலை கைப்பற்றி து போலீசார் விசாரித்து வரு கின்றனர்.
குலசேகரம் அடுத்த காவுவிளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் 10ம் வகுப்பு வரை 5 குலசேகரம் காவஸ்தலத் தில் உள்ள பள்ளியில் படித்தார். அப்போது அங்கு படித்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற் பட்டது. பின்னர் தனுஷ் குடும்பத்தினர் திருச்சி சென்றுவிட்டனர். அங்கு மேல்படிப்பை முடித்த தனுஷ், ஐ.டி., கம்பெ னியில் வேலை பார்த்து வந்தார். தனுஷும், மாணவியும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், மாணவி மேற்படிப்பிற் காக கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் சேர்ந் தார். அங்கு இருவரும் சந்தித்து பல இடங்களில் சுற்றி உள்ளனர். இதை மாணவியின் வீட்டார்
அறிந்து அவரை குலசேகரத்திற்கு அழைத்து வந்து அவருக்கு வேறு ஒருவரு டன் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடத்தினர். இதை அறிந்த தனுஷ் குடும்பத்தாருடன் காதலி வீட்டில் வந்து பெண் கேட்டு உள்ளார். அதற்கு பெண் வீட்டார் மறுத்து உள்ளனர்.
இதனால் மன வேதனை அடைந்த தனுஷ், நேற்று முன்தினம் குலசேகரம் காவஸ்தலம் பகுதியில் உள்ள காதலி வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது காதலி வீட் டில் இல்லை என கூறப் படுகிறது. இதை அடுத்து
வீட்டின் மாடிக்கு சென்று தூக்கு போட்டு தற் கொலை செய்து உள்ளார்.
தகவல் அறிந்து குல சேகரம் போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசா ரிப்பள்ளம் அரசு மெடிக் கல் காலேஜ் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தான், தனுஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல் லது அடித்து கொன்று தூக்கில் தொங்க விடப் பட்டாரா என்பது தெரிய வரும் என தெரிவித்தனர். போலீசார்
தனுஷ் ஐ.டி கம்பெ னியில் இருந்து பணி முடிந்து குலசேகரம் வந்து உள்ளார். அவரது பேக் கில் லேப்டாப் மற்றும் செல்போன் இருந்து உள்ளது. லேப்டாப்பில் காத லியுடன் சேர்ந்து எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களும் இருந்து உள்ளது. இச்சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.