
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
நத்தம் சிரங்காட்டுப்பட்டி சேர்ந்த பச்சையம்மாள் (42). பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக இருந்து வந்த நிலையில், நிறுவனம் முடங்கியதை அடுத்து பொதுமக்களிடம் வாங்கி நிதி நிறுவனத்தில் கொடுத்த பணத்தை, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று தர முடியவில்லை என்பதால், நேற்று முன் தினம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பச்சையம்மாள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.