
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை நடந்து வருகிறது சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நெல்லை மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தார் அப்போது பேராசிரியர் ஒருவரால் அவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதாகவும் அவரால் பி எச் டி பட்டம் பெற முடியாத அளவிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி அந்தப் பெண் பிஎச்டி பட்டம் பெற்று நெல்லை மனோன்மணியசுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் பிரிவில் தற்காலிக பேராசிரியராக பணி செய்து வந்தார் இந்த சூழலில் மீண்டும் அவருக்கு ஏற்கனவே பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த பேராசிரியர் மூலம் பாலியல் தொந்தரவு வருவதாக கூறி பல்கலைக்கழகம் மகளிர் ஆணையம் உயர்கல்வி துறை காவல்துறை என பலரிடம் புகார் கொடுக்கப்பட்டது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஆண்டுதோறும் தற்காலிக பேராசிரியர்கள் பணியிடம் தொடர்பாக நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டு தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது இந்த ஆண்டு அதேபோல் நடத்தப்பட்ட தேர்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணி செய்து வந்த நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் உள்நோக்கத்தோடு பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவதாகவும் தன் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது புகார் அளித்ததன் காரணமாகவே தன்னை உள்நோக்கத்தோடு பழி வாங்குவதாகவும் கூறி பல்கலைக்கழக வளாகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த பெண் பேராசிரியர் தற்கொலை முயற்சி செய்தார் இந்த நிலையில் பேட்டை காவல் துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்த நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை அனைத்து மகளிர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறும் போது தனது கணவரை இழந்து தனது இரண்டு மகள்களையும் நல்ல படிக்க வைத்த நிலையில் பேராசிரியர் ஒருவரால் நடந்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் ஏற்கனவே தனது மகள் இருந்ததாகவும் தற்போது பணி செய்த பேராசிரியர் பணியையும் வேண்டுமென்றே திட்டமிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் பிடுங்கிதன் காரணமாக தனது மகள் தற்கொலை முயற்சி செய்துள்ளார் இந்த விவகாரத்தில் அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களுக்கு தீர்வு கிடைக்க விட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதுதான் முடிவு என்பதை தெரிவித்துள்ளார்