
சட்டவிரோத பணபாரிமாற்ற வழக்கு தொடர்பாக ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாருக்கு தொடர்புடைய இடங்களிளும் மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுப்பட்டனர். குறிப்பாக அவரது இல்லத்திலும் சேப்பக்கத்தில் உள்ள சட்டமன்ற விடிதியிலும் சோதனை நடைபெற்றது.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தினர். இதேபோல அசோக் நகர், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி மகள் இந்திராணி மற்றும் அவரது மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலை நேரத்தில் செந்தில்குமாரின் வீடு பூட்டபட்டிருந்ததாகவும் அமலாக்கதுறை வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும், விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும் தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், அமலக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது திருவல்லிக்கேணி போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.