
தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வந்தது. அப்போது வீசப்பட்ட பலத்த காற்றினால் ஆங்காங்கே அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.
தற்போது தென்காசி மாவட்டத்தில் மழையும், காற்றும் ஓய்ந்த போதிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
என்று பொதுமக்கள்கூறுகின்றனர்
இது குறித்து மின்சார வாரியம் மூலமாக தொடங்கப்பட்ட வாட்ஸப் குழுவில் தகவல் தெரிவித்தாலும் முறையான பதில் இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனரக வாகனங்கள் மூலம் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படும் நிலையில் மின்தடை ஏற்படும் இடங்களில் இந்த வாகனம் செல்லும் போது ஏதேனும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
எனவே நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்லும் இந்த பாதைகளில் மின்தடை ஏற்பட்டால் விபத்துகள் ஏற்படக்கூடும் எனவே மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின்தடை ஏற்படும் நேரங்களில் உடனுக்குடன் செயல்பட்டு இந்த குறைகளை போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.