
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகனத்தீன் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் (35) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றார். அப்பொழுது திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய சக்திவேல் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.