இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 437ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11 ஆயிரத்து 201 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 205 பேருக்கும், டெல்லியில் ஆயிரத்து 640 பேருக்கும், தமிழகத்தில் ஆயிரத்து 267 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆயிரத்து 131 பேரும், மத்தியபிரதேசத்தில் ஆயிரத்து 120 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.