விளை பொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஒட்டுமொத்த இயந்திரமும் செயல்படுகிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது கொரோனா அரசியல் பிரச்சனை அல்ல என்றும் மருத்துவ பிரச்சனை என்று அவர் கூறினார். மருத்துவர்கள் தான் ஆலோசனை கூற முடியும் என்றும் அரசியல்வாதிகள் எப்படி ஆலோசனை கூற முடியூம் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் விளை பொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.