செய்திகள்டிரெண்டிங்தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மற்றும் குரல் அழைப்பில் கூடுதல் நபர்கள்: விரைவில் அறிமுகம்

சமூக விலகல், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங் உள்ளிட்ட சந்திப்புகள் தற்போது காணொலி மூலம் பல பேர் சந்திக்க வசதி இருக்கும் செயலிகள் மூலமாக நடக்கிறது.

இப்படியான சந்திப்புகளின் எண்ணிக்கையும், அதனால் சம்பந்தப்பட்ட செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் வாட்ஸ் அப் நிறுவனம், தனது செயலில் குழு அழைப்பில் கூடுதல் நபர்களைச் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் குரல் வழி அழைப்புகளில் அதிகபட்சம் 4 பேர் வரை கலந்து கொள்ளலாம். புதிய எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று இன்னும் தெளிவாகவில்லை.

வாட்ஸ் அப்பின் புதிய வசதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetaInfo என்ற இணையதளத்தில் மேற்சொன்ன தகவல் பகிரப்பட்டுள்ளது. ஆப்பிள் மொபைல்களுக்கான வாட்ஸ் அப் பீட்டா 2.20.50.23 பதிப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த வசதி அறிமுகமாகும்போது, அழைப்பில் வரப்போகும் அனைவரிடமுமே சமீபத்திய வாட்ஸ் அப் பதிப்பு இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். கடந்த மாதம், ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலம் குழுவாக வீடியோ அழைப்பில் பங்கெடுத்தவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட 70 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதில் செலவிடும் நேரமும் சர்வதேச அளவில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல, கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாட்ஸ் அப் குரல் வழி மற்றும் வீடியோ வழி அழைப்புகளின் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button