கூகுளுக்குச் சொந்தமான யூடியூப், யுபிஐ முறையில் கட்டணம் செலுத்து வசதியை யூடியூப், யூடியூப் மியூஸிக் என இரண்டு தளங்களிலும் அறிமுகம் செய்துள்ளது.
யூடியூப் ப்ரீமியம், யூடியூப் மியூஸிக் ப்ரீமியம் போன்ற சேவைகளுக்குப் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்ற முறையில் இந்தக் கட்டணத்தைச் செலுத்தப் பயனர்களுக்கு வசதி தரப்பட்டிருந்தது. தற்போது யுபிஐ மூலமாகவும் பயனர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ப்ரீமியம் சேவைகளைப் பயன்படுத்துவதோடு தங்களுக்குப் பிடித்த படத்தை வாங்குதல், வாடகைக்கு எடுத்தல், சூப்பர் சாட் போன்ற அம்சங்களுக்குப் பணம் செலுத்துதல், யூடியூப் சேனலுக்கு பணம் கட்டி சந்தா செய்தல் உள்ளிட்ட எல்லா வகையான பரிவர்த்தனைகளுக்கும் யுபிஐ முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்னதாக, யூடியூப் மியூஸிக்கில் பயனர்களின் தனிப்பட்ட விருப்பத்துக்கு ஏற்றவாறு பாடல் பட்டியல்களை அறிமுகம்