கரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டரைக் குறைந்த விலையில் உருவாக்கி ஓசூரைச் சேர்ந்த பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.
ஓசூர் நகரில் உள்ள விஜய் மருத்துவமனையில் புதிய வென்டிலேட்டர் அறிமுகம் மற்றும் செயல் வடிவ விளக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் முன்னிலையில் புதிய வென்டிலேட்டர் கருவியை உருவாக்கிய ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்த பொறியாளர் அகிலேஷ் ஜோசப் மைக்கேல் (24 வயது) செயல் விளக்கம் அளித்தார்.
பி.டெக். மெக்கானிக்கல் மற்றும் எம்.டெக். எம்படெட் சிஸ்டம் பயின்றுள்ள அகிலேஷ் கடந்த 6 ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு சார் துறையில் பணியாற்றி வருகிறார். குறைந்த விலையில் மூன்றாம் தலைமுறைக்கான தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டரை முழுக்க முழுக்க ஓசூரிலேயே வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து பொறியாளர் அகிலேஷ் கூறியதாவது:
”புதிய வென்டிலேட்டர் கருவி கோவிட் – 19 மருத்துவ சிகிச்சையின்போது பெரிய அளவில் உயிர் காக்கும் பணியில் பயன் தரக்கூடியதும், பிற நேரங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவியாகவும் செயல்படும் திறன் கொண்டது. இந்தக் கருவி, தானியங்கியாக செயல்பட்டு மருத்துவரின் கட்டளையைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த 10 இன்ச் அளவுள்ள தொடுதிறையில் பயனர் வரைகலை இடைமுகம் ( கிராஃபிக் யூசர் இன்டர்ஃபேஸ்) கொடுக்கப்பட்டுள்ளது.