அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான திரு.சரத்குமார் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பெயரில் செல்பேசியில் அழைப்புகள் வந்துள்ளது. மேலும் திரு.சரத்குமார் அவர்களின் பெயரில் மற்ற நபர்களுக்கு out Going அழைப்புகளும் சென்றுள்ளது. இது குறித்து திரு.சரத்குமார் அவர்கள் புகார் கொடுத்ததன் பேரில் மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் யாருக்காவது இது போன்று முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களின் பெயரில் செல்பேசியில் அழைப்புகள் ஏதும் வரப்பெற்றால் அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்து கொள்ளுமாறும், இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார்அகர்வால், இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.