மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
செஞ்சார்ஜ் கோட்டை , சென்னை
வருகின்ற பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த பொது இடங்களில் தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை ..
கொரொனா ஊரடங்கு காரணமாக அனைத்து வணக்க வழிபாட்டு தளங்களும் மூட வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று இஸ்லாமிய சமுதாயமும் மசூதிகளை தற்போது வரை மூடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..
இந்நிலையில் ரமலான் சிறப்பு தொழுகையை சமூக இடைவெளியோடு ஆங்காங்கே பத்து இருபது பேர் கூடி தொழுததை கூட காவல்துறை பல பேர் மீது வழக்கு பதிவு செய்தது
வருகின்ற சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை இருப்பதனால் பொது இடங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியோடு பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்துகிறோம் ..
(E- mail மூலமாக அனுப்பிய கடிதம்)
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்