
குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார் தெருக்களில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை சில மர்ம கும்பல்கள் கடத்திவிடுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்து கொண்டிருந்த்து இந்நிலையில் நேற்று நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய டிஐஜி முத்துசாமி குழந்தைகளை பெற்றோர்கள் முன் பின் தெரியாத நபர்களுடன் பேச விடவேண்டாம் என்றும் அவர்களை பாதுகாப்பான பகுதிகளிலே விளையாட அனுமதிக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மீது பெற்றோர்கள் அதிக அக்கரை எடுத்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார் குழந்தைகளை கடத்த முயன்றால் குற்றவாளிகள் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் விசில் செய்திகளுக்காக திண்டுகல் செய்தியாளர் ரியாஸ்