*அண்ணா சிலைக்கு காவி கட்டி களங்கப்படுத்திய காலிகள்!*
*வைகோ கண்டனம்*
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.
தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வந்த சாதி, மதவெறி பாசிசவாதிகள் தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இது தமிழ் அன்னையையே களங்கப்படுத்திய செயலாகும். இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன.
மேலும் மேலும் இதுபோன்ற காலித்தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும்.
மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
30.07.2020