தென்மேற்கு பருவகாற்று ஜில் என்ற சாரல் ஆண்டுக்கு இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாசிகள் குற்றால சாரலை அனுபவிக்க வருவது வழக்கம்
சீசன் முடியும் தருவாயில் அரசின் சார்பில் நடத்தபடும் சாரல்விழா இப்படி குதுகுலமாக சென்றது சுற்றுலா தளமான குற்றாலம்
ஆனால் இந்த ஆண்டு எந்தவித கூட்டமும் இல்லை மழையும் இல்லை சாரலும் இல்லை விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியுமில்லை கொரோனா நோய் தொற்றின் காரணமாக தடை விதிக்கபட்டது சுற்றுலாவாசிகளுக்கு அரசு
இந்நிலையில் தற்போது சீசன் காலம் முடிவடைந்த நிலையில் வானிலை பருவ நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் உயர்ந்துள்ளது
அருவிகளில் ஆர்பரிக்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயத்தைதொழிலாக நம்பியிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதற்க்கு ஏற்றார் போன்று வானிலை மையம் தகவலை தருகிறது
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்
தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்
கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு -எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்களை தெரிவித்துள்ளது