*அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை-உமாபாரதி*
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று பாஜக தேசிய துணை தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பூமி பூஜை நடக்கையில் சரயு நதிக்கரையில் தாம் இருக்க போவதாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணத்தால் பூமி பூஜையில் பங்கேற்க போவதில்லை எனவும், பூமி பூஜை முடிந்ததும் அங்கு சென்று வழிபாடு நடத்த போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சி அழைப்பாளர்கள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கும்படி அயோத்தி கோயில் அறக்கட்டளையையும், பிரதமர் அலுவலகத்தையும் கேட்டு கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Visil media