நாடோடி தென்றலுக்குப் பிறகு மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா*
பாரதிராஜாவும் இளையராஜாவும் கடைசியாக 1992-ல் நாடோடி தென்றல் படத்தில் பணிபுரிந்தார்கள். 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.
மீண்டும் ஒரு மரியாதை படத்துக்கு அடுத்ததாக, ஆத்தா என்கிற படத்தை இயக்கவுள்ளார் பாரதிராஜா. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை பாரதிராஜா
இயக்கவுள்ளார். இப்படத்துக்கு இசை – இளையராஜா.
இளையராஜாவிடம் கதையைச் சொல்ல பாரதிராஜா தயாராக இருந்த நிலையில் கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் இளையராஜா. எனினும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
28 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா – இளையராஜா மீண்டும் இணைவதால் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.