அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளதாகவும்,டிஎஸ்பி ராஜூ விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார். விசாரணை நடத்த 7 தனிப்படைகள் நியமிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்றார். இதன் பின்னர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், இவ்வழக்கில் கைது செய்யபட்ட சிவகாமசுந்தரி, அமானி தாஞ்ஞி, தியானேஷ்வரன் ஆகிய 3 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்த பின்னரே உறுதியான தகவல்களை சொல்ல முடியும் என்றார். மேலும் உயிரிழந்தவர் அங்கொடா லொக்கா தானா என்பது குறித்தும் விசாரித்து பின்னரே உறுதி செய்யப்படும் என்றார்.இன்று தான் விசாரணை துவங்கப்பட்டு உள்ளது எனவும் இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின்னரே வழக்கு குறித்த விபரம் தெரியவரும் என்றவர் விசாரணையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார்.
விசில் செய்திகளுக்காக கார்த்தி பாலாஜி