திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு பற்றிய ஆலோசனை மற்றும் நலத்திட்டங்கள், புது கட்டிடங்கள் திறப்புவிழா, அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட வழக்கு திட்டப்பணிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளுக்காக 06.08.2020 வியாழக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி பத்திரிகையாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முக்கிய தலைவர்களுக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜெ.ரியாஸ் கான்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்