திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி கோவில் கட்டுமான பணிகளை துவக்கி வைத்துள்ளார். இதற்கிடையே பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக ராமர் கோயில் கட்டுவதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இன்று திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் உள்ள காயிதே மில்லத் திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டோர்,
மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை எங்கே போய் மீண்டும் வழங்க வேண்டும். முத்தலாக் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொருளாதார பேரழிவை கொரோனாவால் மறைக்காமல் சிறந்த நிர்வாகத்தை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன குரல்களை எழுப்பினார் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
ஜெ.ரியாஸ் கான்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்