
திண்டுக்கல்லில் மாணவரின் மேல் படிப்புக்கு உதவிய போக்குவரத்து ஆய்வாளர். இன்று ஆசிரியர் தினத்தில் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டியை சேர்ந்த ஜெகதீசன். குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரிப் படிப்பை இடை நிறுத்தம் செய்து தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இது சம்பந்தமாக தகவலறிந்த திண்டுக்கல் போக்குவரத்து ஆய்வாளர் பிரகாஷ் குமார் இளைஞர் ஜெகதீசின் வீட்டிற்கே சென்று மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார் அவர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.