கோவை தொண்டாமுத்தூரில் மழையால்
ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்றிரவு மழை கொட்டித்தீர்த்தது.இந்நிலையில்,கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த சாடிவயல் பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இந்நிலையில், சேத மதிப்பு குறித்து ஆய்வறிக்கைக்கு பின்பு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர் : கார்திக் பாலாஜி