தேசிய பறவையான மயில்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் தனியார் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் கற்க்களை நீர் நிலைப்பகுதி கொட்டபடுவதால் நீர் நிலை ஆக்கிரமிப்பு ஏற்படுகிறது உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு சமுக ஆர்வலர்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட புளியமரத்துக்கோட்டை ஊராட்சி மல்லிகாபுரம் என்ற கிராமத்திற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அட்டளைபாறை கன்மாய் உள்ளது இதைச் சுற்றிலும் பூவாய்பாளையம் நவாலூற்று சேர்வைக்காரனூர் மற்றும் பிஎன் கல்லுப்பட்டி சிலம்ப கவுண்டனூர் ஆகிய பகுதிகள் உள்ள நிலங்களிலிருந்து சுத்தம் செய்யப்பட்டு எடுத்து வரப்படும் கூலாங்கற்கள் கட்டிட கழிவுகள் என சுமார் 200க்கும் மேற்பட்ட லோடுகள் கொள்ளும் அளவிற்கு கற்களை இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளது இக்கண்மாயானது முந்தைய காலங்களில் சுற்றுபகுதி விவசாயிகளில் தானியங்கள் பக்குவப்படுத்தும் களமாகவும் கால்நடைகள் மற்றும் தேசிய பறவையான மயில்கள் தண்ணீர் குடிக்கும் இடமாக இருந்து வந்தது தற்போதும் கூட கரு மலைப்பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான மயில்கள் தண்ணீர் குடித்து வரும் நிலையில் இப்பகுதியில் கற்க்களை கொட்டபடுவதால் நீர் பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகிறது இதனால் தேசிய பறவைகள் அழிந்து வரும் அபாயம் இருந்து வருவதாகவும் கால்நடைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் போவதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்கள் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சிய தலையிட்டு இப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்கள்
செய்தியாளர் ரமேஷ்