பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சியின் சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் சமூக இடைவெளியுடன் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பாபரி மஸ்ஜிதை தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது உலகளவில் இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பதால் மத்திய அரசு ராமர் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி அங்கு நடக்கும் அத்துமீறலை நிறுத்த வேண்டும். இணையதளம் தொலைத்தொடர்புகள் தடையை நீக்க வேண்டும். சிறையிலடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டார்கள், அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் சிவில் பிரச்ச்னையை கிரிமினல் குற்றமாக்கி, முஸ்ஸிம் ஆண்களை சிறைப்படுத்தும் சிறுபான்மை மக்கள் விரோத முத்தலாக் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பொருளாதார பேரழிவை. கொரோனாவால் மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை வழங்கிட வலியுறுத்தியும் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக நாடு தழுவிய அளவில் இந்த அறவழி ஆர்ப்பாட்ட ங்கள நடைபெற்றன.
அதனை படி பழனியில் தொகுதி தலைவர் அக்பர் அலி தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பழனி நகர தலைவர் A.கைசர் அவர்கள் , எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் C.கைசர் அலி B.Sc. அவர்கள்.CFI மாநில தலைவர், L. அப்துல் ரஹ்மான். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றும் எஸ்டிபிஐ கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபி ஐ வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சாதிக் அவர்கள் நன்றியுரை கூறினார்.
பழனி செய்தியாளர்
V. ஜோதிகணேசன்