ச.ராஜேஷ்- காரைக்கால் மாவட்டம் 06.08.2020
செய்தி: கிராமங்களின் மேம்பாட்டுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப் போவதாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாணவி பேட்டி.
பேட்டி: சரண்யா (IAS தேர்வில் வெற்றி பெற்ற மாணவி).
படக்காட்சிகள்: மாவட்ட ஆட்சியர் அலுவகம், பாராட்டு நிகழ்ச்சி, பேட்டி.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
மத்திய தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) 2019 ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகள் சரண்யா தேசிய அளவில் 36வது இடம்பிடித்துள்ளார். புதுச்சேரி மாநில அளவில் முதலிடத்தையும் தேசிய அளவில் 36 ஆவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்ற மாணவிக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இதேபோல காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். காரைக்கால் பெற்றோர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சோழ சிங்கராயர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் ஐஏஎஸ் தேர்வில் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரண்யா ” 11 மற்றும் 12ம் வகுப்புகளில் அரசுப்பள்ளியில் படித்த தான் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று தற்போது ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் இதேபோல அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –