*பழனி தேவாங்கர் தெருவில் உள்ள வீடுகளின் முன்பு மனித தலை மற்றும் எலும்பு உள்ளிட்ட எலும்புக்கூடுகளை வைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.*
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியில் உள்ளது தேவாங்கர் தெரு. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இப்பகுதியில் உள்ள சில வீடுகளின் முன்பு மனித எலும்புக்கூடுகளை மர்மநபர்கள் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சரவணன்,பாக்கியம் என்பவர் வீடுகள் உட்பட சில வீடுகளில் மனித தலை மற்றும் கால்களின் எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை வீடுகளை திறந்து வெளியே வந்தவர்கள் எலும்புக்கூடுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த பழனி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியாஸ்
பழனி செய்தியாளர்