எஸ்.கண்ணன்
கரூர் செய்தியாளர்.
அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக நாடு தழுவிய ஆகஸ்ட் 8 ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் கரூர் மண்டல அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் சி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது எல்பி எஃப் மாவட்ட கவுன்சிலர் சி பாலன் முன்னிலை வகித்தார்.
சிஐடியூ கிளை தலைவர் வீ சிவகுமார் எல்பி எஃப் கிளைச் செயலாளர் வேணுகோபால் தொமுச கிளை-2 செயலாளர் பொன் பன்னீர்செல்வம் தொமுச கோட்ட செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சட்டங்களை திருத்தம் மத்திய மாநில அரசை கண்டித்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கக் கூடாது வட்டித்தொகையை குறைக்காமல் வழங்க வேண்டும் அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.