க்ரைம்

தமிழக டிஜிபி அலுவலக கோ கொரோனா..

தமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்*

*20,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக வழங்கி அசத்திய தமிழக காவல் துறை*

சென்னை டி ஜி பி அலுவலகத்தில் இருந்து தபால் வழியாக தேவகோட்டை பள்ளிக்கே தேடி வந்த பரிசுகள்

தேவகோட்டை – தமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ போட்டியில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை காவல் துறையினர் பரிசாக வழங்கி மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்கள்.

தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி ஆன்லைனில் நடத்தப்பட்டது .போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு காவல் துறையின் சார்பில் சென்னை டி ஜி பி அலுவலகத்தில் இருந்து தேவகோட்டை பள்ளிக்கே ரூபாய் 20,000 மதிப்புள்ள பரிசுகளை அனுப்பினார்கள்.இந்த பரிசுகளை மாணவர்களுக்கு தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துமீனாள் , முத்துலெட்சுமி, செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ஆன்லைனில் குழந்தைகளுக்கான போட்டி 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றது.மாணவர்கள் புகழேந்தி,சண்முகம்,முத்தய்யன்,முகேஷ்,பிரிஜித்,திவ்யஸ்ரீ,மெர்சி,
சுவேதா,மாலினி,ஓவியா ஆகியோர் பங்கேற்றனர்.ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஏ-4 சைஸ் அட்டையில் ஓவியம் வரைந்து அதைப் புகைப்படம் எடுத்து அதற்கென உள்ள மின்னஞ்சலில் தலைமை ஆசிரியர் மூலம் அனுப்பினார்கள் . மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பதால் சில மாணவர்களிடம் மட்டுமே ஆன்ட்ராய்டு மொபைல் உள்ளது.ஆன்ட்ராய்டு மொபைல் மாணவர்களையும்,பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தி ஆசிரியர்கள் ஓவியம் வரைய செய்து போட்டிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.காவல் துறை சார்பாக ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் 1,800 மதிப்புள்ள பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்விற்காக இணைய வழியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் தங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பரிசுகளை பள்ளிக்கே பெரும் முயற்சி எடுத்து அனுப்பி பரிசுகளை வழங்கிய காவல் துறைக்கு மாணவர்களும்,பெற்றோர்களும் நன்றி கூறினார்கள்.

பட விளக்கம் :தமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ போட்டியில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 30,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை காவல் துறையினர் பரிசாக வழங்கி மாணவர்களை ஆச்சரியத்தில் அசத்தினார்கள்.பரிசுகளை மாணவர்களுக்கு தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button