பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு சார்பாக EIA2020 சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை சூறையாட துடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்காதே எனவும்,
மக்களிடம் கருத்து கேட்கும் நடைமுறையை மறுக்கூடாது எனவும்,
இயற்கை வளங்களை உலக முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் EIA2020 சட்டத்தைத் திரும்பப் பெறுவும்,
கொள்ளையடிக்கும்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க துணை போகாதே என கோஷமிட்டனர்.
மேலும் பெரியார் சிலை முற்றுகை விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிகழ்வைக் கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை கௌரவிக்கும் வகையில் மாவட்ட துணை செயலாளர் பாவேந்தன் முன்னிலையில் அனைவரைக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும் பழனி திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் நல்லதம்பி மறைவிற்கு பெரியார் கூட்டமைப்பு சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி செய்தியாளர்
வி.ஜோதிகணேசன்