விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் ஊழல் – அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று வருடங்களாக ஒருவருக்குக்கூட மண்ணெண்ணை வழங்காமல் வெளிச் சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
விசாரணைக் குழு அமைத்து இதுவரை மண்ணெண்ணெய் வழங்கப்படாததற்கான காரணமும் மேலும் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு விலை இல்லாமலும் சில பொருட்கள் மானியத்திலும் அரிசி பருப்பு கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணெண்ணெய் மானியத்தை குறைத்து வழங்கியபோது 2 சிலிண்டர் உள்ளவர்களுக்கு மண்ணெண்ணெய் இல்லை என்றும் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் அரசு உத்தரவிட்டு செயல்பட்டு வந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜபாளையம் பகுதிகளில் எந்த ஒரு கடையிலும் பொதுமக்களுக்கு மன்னனை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் மாதந்தோறும் 50 சதவீத மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்து அப்பகுதிக்கு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்ட சூழலில் பொதுமக்களுக்கு வழங்காமல் ஒதுக்கீடு செய்த மண்ணெண்ணெய் எங்கே சென்றது என்பது குறித்தும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர் ராஜபாளையம் பகுதியில் சுமார் 110 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன சுமார் ஒரு லட்சம் அட்டைதாரர்கள் 50 சதவீதத்திற்கும் மேலான கேஸ் சிலிண்டர் இல்லாதவர்கள் மேலும் கிராம பகுதிகளில் கூட மண்ணெண்ணை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது பொது பொதுமக்களிடம் ஒவ்வொரு பகுதியிலும் விசாரித்தபோது கடந்த 3 ஆண்டுகளாக மண்ணெண்ணெய் வழங்குவதில்லை எனவும் அரிசி பருப்பு சீனி மற்றும் கோதுமை இரண்டு மாதத்திற்க்கு 1 முறை வழங்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் மூன்றாண்டுகளாக அரசு வழங்கிய மண்ணெண்ணெய் வழங்காமல் ஊழல் செய்த நபர்கள் யார்
நியாயவிலை கடைகளுக்கு வழங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களை தலைமையேற்று நடத்திவரும் ஆளும்கட்சியினர் அல்லது நியாய விலைக் கடைகளை பொருட்கள் வழங்குவதை கண்காணித்து வரும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளை என்பது குறித்து உயர் அதிகாரி தலைமையிலான விசாரணை குழு அமைத்து வழங்கப்படாத மன்னென்னை குறித்தும் மேலும் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் மண்ணெண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது உடனடியாக மன்னெண்னை ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கருத்து ஆகும்