சாலை விபத்தில் பலியான செய்தியாளர் கார்த்திகேயன் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக முதல் அமைச்சர் 10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் எம்ஐடி கல்லூரி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற அறந்தாங்கி தினமணி செய்தியாளர் கார்த்திகேயன், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த பொழுது பின்னால் வந்த வாகனத்தின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நவல்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனத்தை ஓட்டி வந்த அவரது அண்ணன் மகன் வேலு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் கார்த்திகேயனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு தொகையா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறது