திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலை அடிவார பகுதியான தெத்துப்பட்டி, பண்ணப்பட்டி, கோம்பை,தருமத்துபட்டி, ஸ்ரீராமபுரம், போலியம்மனூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை தோப்புகளில் விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக சென்று தேங்காய்களை வாங்கி வந்து கன்னிவாடி பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் வைத்து மட்டை உரித்து தரம் பிரிக்கப்பட்டு தேங்காய்கள் மும்பை க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ 20க்கு விற்பனை யானதால் தேங்காய்கள் தேக்கமடைந்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இபாஸ் ஒரு சில தளர்வுகள் காரணமாக வெளிமாநில ஏற்றுமதி தொடங்கியுள்ளது. ஆகையால் தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ 40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் செய்தியாளர்
எம்.பூபதி