திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி பகுதியில் இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த கடந்த சில வருடங்களாகவே மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா அன்று ஊர் பொதுமக்கள் சார்பில் ஒரு சிலை மட்டும் அமைத்து வழிபாடு நடத்தி மறுநாள் ஊர்வலமாக போலீசார் பாதுகாப்போடு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக செல்வது வழக்கம் அப்படி செல்லும்போது பெரிய பள்ளிவாசல் முன்பு தாரை தப்பட்டைகள் ஒழிப்பது நிறுத்தப்படும் அங்கு மெல்லிய இசைக்கருவிகள் மட்டும் இசைக்கப்படும் இது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல வருடம்தோறும் சதுர்த்தி நாளில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைக்க முயற்சி செய்வதும் போலீசார் அவற்றை பறிமுதல் செய்வதும் வருடம்தோறும் நடந்து வருகிறது அந்த வகையில் இன்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர் மையப் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தினர் இதையடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு ஊர்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணியினர் காவல்துறையினர் கைது செய்து விநாயகர் சிலையை திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் எடுத்து வந்து கோட்டை குளத்தில் கரைத்தனர்.
ஜெ.ரியாஸ் கான்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
9787790707