கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கலையிழந்த நிலையில் சிவசேனா கட்சியின் சார்பில் ஒரு அடி முதல் மூன்று அடியிலான 108 விநாயகர் சிலைகள் வீடுகள் மற்றும் கோவில்களில் பூஜைக்கு வைக்கப்பட்டு இன்று விஜர்சனம் செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சிவசேனா கட்சி அலுவலகத்தில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் ராஜன் தலைமையில் பக்தர்கள் சிலையை நடந்தே ஊர்வலமாக எடுத்து சென்று தக்கலை அருகே உள்ள வள்ளியாற்றில் எடுத்து கொண்டு சென்று பூஜைகள் செய்து பின்னர் சிலைகளை ஆற்றின் கரையில் வைத்து பஜனைபாடி தகுந்த பாதுகாப்புடன் விஜர்சனம் செய்தனர்.
கன்னியாகுமரி செய்தியாளர் சஞ்ஜீவன்