ஒட்டுனரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர்
நடவடிக்கை எடுக்க கோரிக்கை……
புதுக்கோட்டைமாவட்டம் அவுடையார்கோவில் அருகே உள்ள கரூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி.
இவர் அப்பகுதியில் வாடகைக்கு கார் ஒட்டி வருகிறார் தனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி கரூர் கடைவீதி பகுதியில் தன்னை நிர்வாணபடுத்தி தன்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறந்தாங்கி காவல்துணை கண்கானிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ஒட்டுனர் கணபதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டுள்ளார்.