தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நியாயவிலைக்கடை கட்டி13 ஆண்டுகள் திறக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் பகுதியில் மறைந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சொ.கருப்பசாமி யின் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நியாயவிலைக்கடை கட்டப்பட்டது.
அந்த கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் 13 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்பட்டு நியாயவிலைக்கடையை திறக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி நியாயவிலைக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நியாய விலை கடையை திறக்ககோரி பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்…