மதுரையில் டீக்கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்த கும்பலால் பரபரப்பு.
மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்திவரும் முருகன் என்பவர் இன்று அதிகாலை தனது கடைக்கு பால் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் மதுரை புதூர் அருகே உள்ள சூர்யாநகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது தனியார் பள்ளி அருகில் நின்றுகொண்டிருந்த மர்ம கும்பல் வாகனத்தை வழிமறித்து முருகனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியது.
தப்பி ஓட முயன்ற முருகனை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது அந்த கும்பல். இந்தச் சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.