ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மூலம், விவசாயிகளுக்கு 52 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டது.
அந்தியூர் தேர்வீதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி செயலர் கந்தசாமி வரவேற்றார். கூட்டுறவு சங்க மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக 29 நபர்களுக்கு 29 லட்சத்து 91 ஆயிரமும், பெண் கன்று வளர்ப்பு கடனாக 25 நபர்களுக்கு 21 லட்சத்து 75 ஆயிரமும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 50 ஆயிரமும் வழங்கினார்.
இதில், மாநில கோ-ஆப்டெக்ஸ் இணை இயக்குனர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர்.
எஸ் திருபாலா.