நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு ஜோடி ஏழை மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கினர்.
நடிகர் விஜய்யின் திருமண நாள் இன்று. விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிஜாம் காலனியில் உள்ள மாவட்ட தலைவர் வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளக்கோவில் விடுதி பகுதியைச் சேர்ந்த சுகன்யா மற்றும் அன்னவாசலை சேர்ந்த சுந்தரம் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் ஏராளமான விஜய் ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தினர். மேலும் மணமக்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை களையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் இன்று அவருடைய திருமண நாளில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் வித்தியாசமான முறையில் ஒரு ஜோடி ஏழை மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி