ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமை கிளை செயல்பட்டு வருகிறது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து வரவு செலவு கணக்கு செய்து சென்று வருகின்றனர். இந்த வங்கியின் பணியாளர் ஒருவருக்கு கொரானா நோய் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வங்கியின் உள் பகுதி மற்றும் வெளிப்புற பகுதிகளுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வங்கிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. 26-ம் தேதி முதல் 30-தேதி வரை சுமார் 5 நாட்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டிற்க்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கி பூட்டப்பட்டது தெரியாமல் பல வாடிக்கையாளர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் வங்கி அருகில் உள்ள ஏடிஎம் வழக்கம் போல் திறந்து செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு செய்தியாளர் கண்ணன்