கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள, காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை 17 சதவீதம் குறைவு என்பது போன்ற குறிப்புகள் இல்லை என்றும், இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் பதில் கூற வேண்டும் என்றும் கூறினார்.
நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர்,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகள் தான் தேர்ச்சி செல்லும் என்ற நிலையில், அதை நிரந்தரமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் என்றும் விளக்கம் அளித்தார். மேலும்
அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் போது இதையும் கூடுதலாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்றும்
தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் தெரிவித்தார்.
தனித்தேர்வாளர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர்,
நூலகர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மலை கிராமத்தில் உள்ள மாணவர்கள் மின் வெட்டால் பாதிக்கப்படும் நிலையில் யு டியூப் ல் இருந்து பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.எந்தெந்த பகுதியில் இது போன்ற குறை உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும்,
10,12 முடித்தவர்கள் ஆன்லைன் மூலமாகவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அமைச்சர் தெரிவித்தார். மேலும்
நிதி்நெருக்கடி காரணமாக 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முடியாத நிலை உள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோபி செய்தியாளர் ராமச்சந்திரன்